/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பெண்கள் உயர்நிலைப்பள்ளியை தரம் உயர்த்துவதில் சிக்கல் ...அரசுக்கு பங்குத்தொகை செலுத்த யாருக்கும் ஆர்வபெண்கள் உயர்நிலைப்பள்ளியை தரம் உயர்த்துவதில் சிக்கல் ...அரசுக்கு பங்குத்தொகை செலுத்த யாருக்கும் ஆர்வ
பெண்கள் உயர்நிலைப்பள்ளியை தரம் உயர்த்துவதில் சிக்கல் ...அரசுக்கு பங்குத்தொகை செலுத்த யாருக்கும் ஆர்வ
பெண்கள் உயர்நிலைப்பள்ளியை தரம் உயர்த்துவதில் சிக்கல் ...அரசுக்கு பங்குத்தொகை செலுத்த யாருக்கும் ஆர்வ
பெண்கள் உயர்நிலைப்பள்ளியை தரம் உயர்த்துவதில் சிக்கல் ...அரசுக்கு பங்குத்தொகை செலுத்த யாருக்கும் ஆர்வ
ADDED : ஜூன் 01, 2010 01:23 AM
சிவகாசி: அரசு கோரும் பங்குத்தொகையை செலுத்த யாரும் ஆர்வம் காட்டாததால், திருத்தங்கல் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியை தரம் உயர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திருத்தங்கல் எஸ்.ஆர்., அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கடந்த ஆண்டுகளாக இப் பள்ளி மாணவர்களால் அடிக்கடி பிரச்னைகள் உருவாவது வாடிக்கையாக நடந்து வருகிறது. மாணவிகளை சில மாணவர்கள் கேலி பேசுவதால், மாணவர்களுக்குள் மோதல் உருவாகிறது. இத்தவறுகளை கண்டிக்கும் ஆசிரியர்கள் மீது, ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார் என ஆசிரியர் மீதே மாணவர்கள் புகார் கூறுகின்றனர். இப் பிரச்னைகளால் அடிக்கடி பள்ளிக்குள் தகராறு, மாணவர்கள் போராட்டம் தொடர்ந்தது. இது திருத்தங்கலுக்கே பெரும் தலைவலியாக இருந்தது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் கடந்த ஆண்டு, பெண்கள் அரசு உயர்நிலைப்பள்ளி துவக்க அனுமதித்து ஆறாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை மாணவிகளுக்கு தனி பள்ளி செயல்படுத்தப்பட்டது. திருத்தங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து பத்தாம் வகுப்பை முடிக்கும் 100 முதல் 120 மாணவிகள் வரை மேல்நிலைக்கல்வி பயில தகுதி பெறுகின்றனர். இவர்கள் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்க வசதியாக தனியாக ஒரு மேல்நிலை பள்ளி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
பெண்கள் உயர்நிலைப்பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த, பொதுமக்கள் பங்கு தொகையாக ஒரு லட்ச ரூபாயை செலுத்த அரசு பலமுறை கோரியது. இதை செலுத்த யாரும் ஆர்வம் காட்டவில்லை. இதனால் வரும் கல்வி ஆண்டில் பெண்கள் உயர்நிலைப் பள்ளியை தரம் உயர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டுள் ளது. மாணவிகளுக்கு தனி பள்ளியாக செயல்பட்டால் பிரச்னை உருவாகாமல் இருப்பதோடு மாணவ, மாணவியர் கல்வித்தரமும் மேம்படும். எனவே, அரசுக்கு செலுத்த வேண்டிய பொதுமக்கள் பங்களிப்பு தொகையை பள்ளி நிர்வாகமும், பெற்றோர் ஆசிரியர் கழகமும் செலுத்துவதில் ஆர்வம் காட்ட வேண்டும்.